லேபிளின் விளக்கத்தில் உள்ள உரையின் பாணி மற்றும் வடிவமைப்பைத் திருத்துதல்
பாணி மற்றும் வடிவமைப்பைத் திருத்துதல்
- மேல் கருவிப்பட்டியில் உள்ள திருத்து/அளவிடு கருவி என்பதைத் தேர்ந்தெடு.
விரைவு விசை: அல்லது உங்கள் விசைப்பலகையில் "Q" பொத்தானை அழுத்தலாம்.
- வரைபடக் காட்சியில், லேபிளின் மீது எங்கு வேண்டுமானாலும் கிளிக் செய்க.
லேபிள் திருத்தி சாளரம் தோன்றும்.
- "மேம்பட்ட திருத்தம்" இணைப்பைக் கிளிக் செய்க.
- "விளக்கம்" புலத்தில், நீங்கள் திருத்த விரும்பும் உரையை கிளிக் செய்து இழுத்து தேர்வுசெய்யவும்.
- "விளக்கம்" புலத்திற்கு மேலே, உரைக்கு பாணி மற்றும் வடிவமைப்பைச் சேர்க்க பொத்தான்களைப் பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு பொத்தானின் நோக்கத்தையும் விருப்பங்களையும் இந்தப் பட்டியல் விளக்குகிறது:
- தடித்த உரை
- சாய்வு உரை
- அடிக்கோடிட்ட உரை
- குறுக்குக்கோடு - உரையின் நடுவே ஒரு கோடு வரைகிறது.
-
எழுத்துரு அளவு
- சாதாரண.
- 8pt.
- 10pt.
- 12pt.
- 14pt.
- 18pt.
- 24pt.
- 36pt.
- உரை நிறம்
- உரை பின்னணி நிறம்
-
எழுத்துரு
- Arial.
- Monospace.
- Serif.
- New Times Roman.
- Verdana.
- Roboto.
-
சீரமை அல்லது இருபுறமும் சீராக்கு
- இடதுபுறம் சீரமை.
- மையம்.
- வலதுபுறம் சீரமை.
- இருபுறமும் சீராக்கு (கடைசி வரி இடதுபுறம் சீரமைக்கப்படும்).
- எண்ணிட்ட பட்டியல்
- புள்ளியிட்ட பட்டியல்
- பாணி மற்றும் வடிவமைப்பை அழி
- திருத்தி முடித்த பின்பு, "SAVE" பொத்தானைக் கிளிக் செய்க.
- வரைபடக் காட்சியில், லேபிளின் உரையில் செய்த மாற்றங்களைக் காண்பீர்கள்.
மேலும் காண்க
லேபிளின் விளக்கத்தில் படத்தைப் பதிவேற்று
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது